C மற்றும் C++க்கு அறிமுகம்
சக்திவாய்ந்த அம்சங்கள், எளிய syntax மற்றும் பெயர்வுத்திறன் ஆகியவை வணிக மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு programmerகளிடையே, Cஐ ஒரு விருப்பமான மொழியாக அமைத்துக்கொடுக்கின்றன. பெயர்வுத்திறன் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான செயலியை, உதாரணத்திற்கு இன்டெலை கொண்ட கணினிக்காக எழுதப்பட்ட C programகளை, மோட்டோரோலா, சன் ஸ்பார்க் அல்லது ஐபிஎம் போன்ற வெவ்வேறு செயலிகளைக் கொண்ட கணினிகளில் சிறிய அல்லது மாற்றமின்றி இயக்க முடியும். Operating systemகளின் வளர்ச்சியில் C language பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு Operating System (OS) என்பது ஒரு கணினியின் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு software (programகளின் தொகுப்பு) ஆகும். இது உங்கள் கணினியில் உள்ள பிற programகளையும் செயல்பட வைக்கிறது.
எடுத்துக்காட்டாக, உங்கள் கணினியில் எந்த operating systemமும் நிறுவப்படவில்லை எனில், Microsoft Word போன்ற ஒரு word processor programஉடன் நீங்கள் பணியாற்ற முடியாது. விண்டோஸ், யூனிக்ஸ், லினக்ஸ், சோலாரிஸ் மற்றும் மேக்OS ஆகியவை பிரபலமான operating systemகளில் சில.
நியூ ஜெர்சியிலுள்ள பெல் ஆய்வகத்தில் கணினி பொறியாளரான டென்னிஸ் எம். ரிச்சி 1970 களின் முற்பகுதியில் Cஐ உருவாக்கினார். யுனிக்ஸ் operating systemக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அது விரைவில் ஒரு சக்திவாய்ந்த, பொது நோக்கத்திற்கான programming languageஆக வளர்ந்தது.
C++ என்பது 1979 ஆம் ஆண்டில் பெல் ஆய்வகத்தில் ஜார்ன் ஸ்ட்ரோவ்ஸ்ட்ரப் உருவாக்கிய ஒரு programming language ஆகும். C++ என்பது நிலையான தட்டச்சு செய்யப்பட்ட, சுதந்திர-வடிவம் மற்றும் பல-அடுக்குகளை கொண்ட, தொகுக்கப்பட்ட, பொது-நோக்கத்திற்கான, சக்திவாய்ந்த ஒரு programming language ஆகும். C++ என்பது object oriented language ஆகும். இது classகள் மற்றும் objectகள், பாலிமார்பிசம், என்காப்ஸுலேஷன், இன்ஹெரிடன்ஸ் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. C++ வன்பொருள் வடிவமைப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
C மற்றும் C++க்கான ஸ்போகன் டுடோரியல் முயற்சி ஐ.ஐ. டி பாம்பேயைச் சேர்ந்த அஸ்வினி பாட்டீல் அவர்களால் வழிநடத்தப்பட்டது. ஐ.ஐ.டி பாம்பேயைச் சேர்ந்த பேராசிரியர் உதய் கெட்கர் தொடக்கத்தில் அணிக்கு வழிகாட்டினார் மற்றும் பாடநெறி அவுட்லைனை ஆய்வு செய்தார். C மற்றும் C++ ஆகியவற்றை ஒரே பாடத்திட்டத்தில் கற்பிக்க அவர் முன்மொழிந்தார், ஏனெனில் இரண்டும் ஒரே அடிப்படை syntaxஐ கொண்டிருக்கின்றன மற்றும் Cன் operatorகள், keywordகள் மற்றும் constructகள் அனைத்தும் C++இலும் உள்ளன.
பிற பங்களிப்பாளர்கள்: சைதன்யா மோகாஷி, ரித்விக் ஜோஷி, தவால் கோயல்
கற்பவர்கள்: உயர்நிலைப் பள்ளி மற்றும் யுஜி / பிஜி சிஎஸ்இ / சிஎஸ் / ஐடி மாணவர்கள் மற்றும் அடிப்படை programmingஐ கற்றுக்கொள்ள விரும்பும் எவரும்.
Click here for brochure
DOWNLOAD APP
FOLLOW US