Linux உலகில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான Operating Systemகளில் ஒன்றாகும். Linux, Unix குடும்ப ரகத்தை குறிக்கிறது-அதாவது Linux kernelஐ பயன்படுத்துகின்ற கணினி operating systemகளை போன்ற ஒன்று. மொபைல் போன்கள், டேப்லெட் கணினிகள் மற்றும் வீடியோ கேம் கன்சோல்கள் முதல் மெயின்பிரேம்கள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரை பல வகையான கணினி வன்பொருள்களில் Linux நிறுவப்படலாம்.
இது ஒரு opensource software மற்றும் Linux kernel, ஜி என் யு, அதாவது பொது மக்கள் உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது, எனவே இதை இலவசமாக மாற்றியமைத்து விநியோகிக்க முடியும்.
Linux உண்மையில் ஒரு kernel மட்டுமே. kernel மட்டுமல்லாது, பல programming கருவிகள் மற்றும் பயன்பாடுகளையும் உள்ளடக்கிய விநியோகங்களை (பெரும்பாலும் ப்லேவர்ஸ் என்று அழைக்கிறார்கள்) பலர் ஒன்றாக இணைத்துள்ளனர். Red Hat Linux, Ubuntu, SuSE Linux, மற்றும் Debian GNU/Linux ஆகியவை சில பிரபலமான விநியோகங்களில் அடங்கும்.
Terminalலில் டைப் செய்ய வேண்டிய commandகளின் பரந்த மற்றும் சக்திவாய்ந்த களஞ்சியத்தைப் பயன்படுத்தி Linuxன் உண்மையான சக்தியைத் பெறலாம். Linux ன் source codeடாக இல்லாவிட்டாலும், அதன் அறிவுசார் பாரம்பரியத்தை Unix OSஉடன் அடையாளம் காண முடியும் என்பதே இதன் பின்னணியில் உள்ள காரணம் ஆகும். GUI வருவதற்கு மிகவும் முன்பே Unix உருவாக்கப்பட்டது. இவ்வாறு Unix (எனவே Linux) நெகிழ்வான text-mode commandகளின் ஒரு பரந்த வரிசையை வழங்குகிறது.
இந்த டுடோரியல் தொடரில், fileகள், directoryகள், processகள் போன்றவற்றைக் கையாள பல்வேறு வகையான Linux commandகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவோம். இந்த டுட்டோரியல்கள், Ubuntu பதிப்பு 10.04 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. எந்த Linux OS பதிப்புகளுக்கும் இவை பொருந்தக்கூடியவை என்பதை தீர்மானிக்க வலைத்தளத்தின் தனிப்பட்ட ஸ்போகன் டுட்டோரியல்களுக்கு தொடர்புடைய text boxஐ பார்க்கவும்.
Linuxற்கான ஸ்போகன் டுடோரியல் முயற்சியை திரு அனிர்பன் ராய் சவுத்ரி வழங்கியுள்ளார். ஸ்கிரிப்டுகள் மற்றும் டுட்டோரியல்களை உருவாக்க உதவிய மற்ற பங்களிப்பாளர்கள் ஷாஹித் அலி ஃபாரூக்கி, ஷம்புலிங்கய்யா, அனுஷா கடம்பலா, அனுவ்ரத் பராஷர், அபிஜித் சுனில், பிரசாந்த் ஷா, நமிதா மெனிசஸ், பாலசுப்பிரமணியம் எஸ்.என்., கவுரவ் ஷிண்டே, பிரவீன் எஸ்., சச்சின் பாடில், அஷ்வினி பாடில், தேசிக்ரூ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், மற்றும் நான்சி வர்கே
கற்பவர்கள்: Linux Operating Systemஐ கற்றுக்கொள்ள விரும்பும் எந்தவொரு நபர். ஆரம்பநிலை கற்பாளருக்கு மிகவும் அவசியம்.
DOWNLOAD APP
FOLLOW US