Java க்கு அறிமுகம்
Java ஒரு இலவச மற்றும் open source high level programming language ஆகும். இது எளிமையானது மற்றும் object oriented language ஆகும். இன்றுவரை, Java platform 6.5 மில்லியனுக்கும் அதிகமான மென்பொருள் உருவாக்குநர்களை ஈர்த்துள்ளது. Java Platform மற்றும் Standard Edition (Java SE), டெஸ்க்டாப், serverகளில், மற்றும் இன்றைய கோரப்பட்ட Embedded மற்றும் Real-Time சூழல்களிலும் Java applicationகளை உருவாக்க மற்றும் விரிவுறுத்த உங்களை அனுமதிக்கிறது.
மடிக்கணினிகள் முதல் மொபைல் போன்கள் வரை, விளையாட்டு கன்சோல்கள் முதல் விஞ்ஞான சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரை , மியூசிக் பிளேயர்கள் முதல் இணையம் வரை, செட்-டாப் பெட்டிகளிலிருந்து அச்சுப்பொறிகள் வரை, வெப் கேமராக்களிலிருந்து மருத்துவ சாதனங்கள் வரை - அது ஒரு பெரிய பட்டியல், Java எல்லா இடங்களிலும் உள்ளது !!!!!
இந்த டுட்டோரியல்கள், Java பதிப்பு 1.6.x இன் அம்சங்கள் மற்றும் பயன்பாட்டை கொண்டிருக்கிறது. Java பதிப்புகள் மற்றும் OSக்கு பொருந்தக்கூடியவற்றை தீர்மானிக்க இணையதளத்தில் தனிப்பட்ட ஸ்போகன் டுட்டோரியல்களுக்கு தொடர்புடைய text boxஐ பார்க்கவும்.
Javaக்கான ஸ்போகன் டுடோரியல் முயற்சியை ஹைதராபாத்தின் டேலண்ட் ஸ்பிரிண்ட் மற்றும் ஐ.ஐ. டி பம்பாயின் ஸ்போகன் டுடோரியல் குழு இணைந்து வழங்குகின்றன. பிரதமேஷ் சலுங்கே, ஆர்யா ரதீஷ், அஸ்வினி பாட்டீல் ஆகியோர் ஸ்கிரிப்டை உருவாக்க உதவியவர்கள். ஹைதராபாத்தின் டேலண்ட் ஸ்பிரிண்டின் திரு அசோக் பிச்சையிடமிருந்து இந்த குழு போதுமான வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளது.
கற்பவர்கள்: யுஜி / பிஜி சிஎஸ்இ / ஐடி / சிஎஸ் மாணவர்கள்.
Click here for brochure
DOWNLOAD APP
FOLLOW US